1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்

மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் தேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். 
அஷ்ட பைரவர், அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள். அவரவர்களுக்கு தற்போதைய நடப்பு திசா கிரகத்தை அறிந்து கொண்டு கீழே உள்ளபடி அந்த கிரக வழிபாடுகள் செய்ய கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் பைரவர் அருளால் பெருகும்.
 
சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்:
 
"ஓம் கால தண்டாய வித்மஹே வஜ்ர வீராய தீமஹி தந்நோ: 
கபால பைரவ ப்ரசோதயாத்" 
"ஒம் கஜத்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தந்நோ: 
இந்திராணி ப்ரசோதயாத்" 
 
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும். இதனால், சந்திர திசை யோக திசையாக இருந்தால், யோகங்கள் அதிகரிக்கும்.  சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.