ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நாம் செய்யக்கூடாத சில ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா...?

கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமலே சில தவறுகளை செய்கிறோம். அதனால் நாம் நினைத்து வழிபடக்கூடிய சில நல்ல காரியங்களும் தடைபடுகிறது. இதை நிவர்த்தி செய்ய உதவும் சில வழிமுறைகளை பார்ப்போம்.
ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்துவிடக்கூடாது.
 
திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது. அதே போல வீட்டில் கோலம்  போடாமலும் விளக்கேற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது.
 
விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் போது அதில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடக் கூடாது. அது மட்டுமில்லாமல் கையில் இருக்கும் அந்த எண்ணெயை தலையில் எக்காரணம் கொண்டும் தடவக் கூடாது. சாமி படங்களில் இருக்க கூடய காய்ந்த பூக்களை  உடனே அகற்ற வேண்டும்.
 
விஷ்ணு கோவிலுக்கு சென்று வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். எனவே விஷ்ணு  கோவிலிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் அங்கே அமரக் கூடாது.
 
ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையில் எடுத்து செல்வதன் மூலம் செல்லும்  காரியம் வெற்றியோடு முடியும்.
 
வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தனலாபம் போன்றவை  அதிகரிக்கும்.
 
அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.