செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2025 (18:07 IST)

மகாளய பட்சம்: முன்னோர்களை வணங்கி வாழ்வில் வளம் பெற ஒரு அரிய வாய்ப்பு

மகாளய பட்சம்: முன்னோர்களை வணங்கி வாழ்வில் வளம் பெற ஒரு அரிய வாய்ப்பு
மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் என்றும் பொருள். ஆக, மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 15 நாட்கள் கொண்ட ஒரு புண்ணிய காலமாகும். இந்த நாட்களில் பித்ருக்கள் பூலோகத்திற்கு வந்து, கோவில்கள் மற்றும் புண்ணிய நதிகளில் உள்ள தெய்வீக சக்திகளை பெற்று செல்வார்கள் என்பது ஐதீகம்.
 
மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மற்றும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. இந்த காலத்தில், நாம் நமது முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் மற்றும் அன்னதானம் போன்றவை அவர்களுக்குப் பெரும் ஆத்ம சக்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. 
 
மகாளய பட்ச வழிபாட்டிற்கு எந்தக் கடுமையான விதிகளும் இல்லை. அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யலாம். சாதி, மத பேதமின்றி அனைவரும் இதனை செய்யலாம்.
 
வாழும் காலத்தில் நமது பெற்றோர்களை அல்லது முன்னோர்களை முறையாக கவனிக்க தவறியவர்கள், இந்த நாட்களில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் அந்தப்பாவத்திற்குப் பரிகாரம் தேடலாம்.

Edited by Mahendran