வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோவில் கற்சிலைகளில் இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா....?

சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் இரண்டு பாம்புகள் பிண்ணிக் கொண்டிருப்பது போன்று, கற்சிலைகளாக நிறுவப் பட்டிருப்பதை காணலாம்.

ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். 
 
இந்த கற்சிலைகளைப் பார்த்து தான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக் கொண்டுள்ளது. இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால்  தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.
 
நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள். இந்த விஷயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.
 
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்), சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்), ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். 
 
இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது, அதாவது செயலற்று போகிறது. "ஆயில்யம்" என்றால் "பிண்ணிக்கொள்வது" அல்லது  "தழுவிக்கொள்வது" என்று பொருள்படும்.
 
இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும். எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.