தைப்பூச சிறப்பு வழிபாடுகளும் அற்புத பலன்களும் !!

Lord Murugan
Sasikala|
தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள்  ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
 
தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
 
வாயு பகவானும், வர்ண பகவானும், அக்கினி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை  கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணர்த்தப்பட்ட புண்ணியநாள், தைப்பூச நன்னாளாகும்.
 
தை மாத பவுர்ணமியும், பூசம் நட்சத்திரமும் கூடி வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
 
சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர்.
 
தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள்,  செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
 
வேண்டியதை கொடுக்கும் இத்திருநாளில்  முருகப் பொருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் எந்த தடங்கலும் இன்றி உங்களின் வேலை சுபமாக முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :