மூதேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் இருந்தவர் இவரே. இவளுக்கு தவவை என்ற பெயரும் உண்டு. ஆதியில் காளிக்கு அடுத்து இந்த தவவை வழிபாடே முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது.
இந்த மூதேவிதான், ஜேஷ்டாதேவி என்றும் கூறுவர். இவர் சனியின் மனைவி என்றும் கூறப்படுகிறது. எனவே சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள், இந்த ஜேஷ்டாதேவி எனும் தவவையை வனங்கி வந்தால், சனி பகவானின் நன்மைகள் நம்மை வந்தடையும்.