திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவனுக்கு உகந்த பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்...!

சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது திங்கட்கிழமை, அதே போல சிவனை வழிபட சிறந்த நேரமாக கருதப்படுவது பிரதோஷ நேரம், சிவனுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.
பிரதோஷ நேரம் என்று கூறப்படும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சிவனை வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும். சோமம் என்ற சொல்லுக்கு சூரியன் என்று சந்திரன் என்றும் இருவேறு பொருள்கள் உள்ளன. சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானை திங்கள் அன்று வரும் பிரதோஷ நாளில் வழிபடுவோருக்கு  வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும், மன நிம்மதி பெருகும், தீராத குழப்பங்கள் தீரும்.
பொதுவாக பிரதோஷம் கால வேளையில் சிவனை வழிபடுவதால் புண்ணியம் ஏற்படும் என்பது ஐதீகம். சிவன் கோயிலிற்கு சென்று சிவபெருமானுக்கு வில்வத்தை சார்தலாம். அதோடு நந்தி தேவருக்கு செவ்வரளி மற்றும் அருகம்புல் மாலையை அணிவித்து வழிபாடு செய்யலாம். பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து நந்தி தேவரின் அருளையும் பெறலாம். சிவாலயங்களுக்கு செல்ல முடியாதோர் ” ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து  வரலாம்.