1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மறுபிறவி குறித்து வள்ளலார் கூறுவது....!

உதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால், அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விடவேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேறொரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது. அவன் செய்த நன்மை பொறுத்து  வீடு என்கிற உடம்பு அமைகிறது.
கர்ம வினை என்பது அவன் செய்த பவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு  போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான். மீண்டும் அவ்வீட்டை கெடுப்பான் அது போலதான் கர்மா என்கிற பாவமும், ஆன்மாவுடன் போகும். மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து  வாழ்வோம்.
அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும். இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம்  சம்பாதித்து வாங்கும் பனம் போல பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கிய கடன் போல, கடன் நிறைய வாங்கி வைத்து பனம் சம்பாதித்தால் அது  கடனுக்குதான் போகும் சொத்தில் சேராது அதாவது புண்ணியத்தில் சேராது.