Daily Horoscope
✕

கஷ்டங்களை போக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு...!!

Updated: சனி, 8 டிசம்பர் 2018 (14:39 IST)
 
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக  கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
 
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய்.  அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக  ஏற்ற வேண்டும்.
 
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி  வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத  பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

எல்லாம் காட்டு

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!

நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments