1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெற செய்யும் மந்திரம்...!

மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது. நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது. 
அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம" என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.
 
சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
 
மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில்  வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
 
மந்திரம்: 
 
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!