முன்னோர்கள் கடைப்பிடித்த சில பழக்கங்களும் காரணங்களும்...!
மஞ்சள் மருதாணீயின் சிறப்பு: குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதானி இட்டுக் கொள்ளலாம்.
மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளக்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது
கை கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுதன்மை வராது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்: இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானால் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.
அருந்ததி காணக்கிடைப்பதற்குரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.