1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அட்சய திருதியை நாளன்று மந்திர ஜபத்தின் பலன்கள்...!

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:
 
ஓம் நமோ பகவதி| மிருதசஞ்சீவினி| சந்தி குரு குரு ஸ்வாஹா|
 
தன்வந்திரி மந்திரம்:
 
ஓம்| நமோ பகவதே வாசுதேவாய| தன்வந்திரியே| அமிர்தகலச ஹஸ்தாய|
சர்வ ஆமய நசனாய| த்ரைலோக்ய நாதாய| ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
 
தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.