அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகள்...!
வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்கத்தின் கொள்கைகள்: வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும்.
ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.
1. கடவுள் ஒருவரே.
2. அவரை ஜோதி வடிவில் உண்மை அன்பால் வழிபாட வேண்டும்.
3. சிறு தெய்வ வழுபாடு கூடாது.
4. அத்தெய்வங்களின் பேரால் உயிர் பலி கூடாது.
5. புலால் (மாமிசம்) உண்ணக் கூடாது.
6 சாதி, சமயம், முதலிய வேறுபாடுகள் கூடாது.
7. எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணி ஓழுகும் ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை கடைப்பிடிக்க வேண்டும்.
8. ஏழைகளின் பசி தீர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோள்.
9. புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்கமாட்டா.
10. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
11. இறந்தவர்களை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.
12. எந்த காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.