1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீபம் ஏற்றுவதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா...?

விநாயக பெருமானுக்கு 1, 7 தீபம், முருகருக்கு -6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம்,  மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் - சிங்கம் - நந்தி முன்பாக, பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக, பெருமாள் - கருடன் முன்பாக, முருகர் - மயில் முன்பாக ஏற்றவேண்டும்.
 
தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு - 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபடவேண்டும்.
 
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
 
காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.
 
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான  பலன்களை அடைய லாம்.
 
புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால்  ஊதக்கூடாது.
 
தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் ,தீப துர்கா என்று மூன்று முறையும்,குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்கவேண்டும்.