செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவதால் இத்தனை பலன்கள் உண்டா...?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் முகபொலிவும் கூடுகிறது. 

இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். சரியாக 30 நாட்கள்  கழித்து,  மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். 
 
நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில்  கூடும்.
 
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம் என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். 
 
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்,  குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.