தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.
சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.
எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.
கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.