வீட்டில் ஒட்டடை சேர்வதால் வாஸ்து பிரச்சனை ஏற்படுமா...?

கட்டடகலை சாஸ்திரம் என்கிற வாஸ்துகலையில் எண்ணற்ற விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அதில் ஒவ்வொன்றும் பயன்தரக்கூடியது. அனுசரிப்பதற்கு எளிதானது. முக்கியமாக, தடையற்ற பண வரவு பெற, கட்டட சாஸ்திரத்தில் நிறைய விதிமுறைகள் உண்டு. அதில் முக்கியமானது, வீட்டில் தூசியும், ஒட்டடையும் அதிக அளவில் சேரவிடக்கூடாது. 
தூசியும், ஒட்டடையும் வீட்டில் இல்லாமல் இருந்தால் அந்த இல்லத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். பல வீடுகளில், தூசியும், ஒட்டடையும் இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பணத்திற்கு பஞ்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 
 
அதிக அளவில் தூசியும் ஒட்டடையும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடைதான் மேற்கூறையை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என எண்ணும்படியாக ஒட்டடை அதிகளவில் இருக்கிறது. அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது, வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், ஒட்டடையும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் ஆகும்.
 
வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த  மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியே கொட்டக்கூடாது. இது போன்ற சில எளிய  வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்; திருமகள் தேடி வருவாள். அவளது அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும் சேரும்  என்கின்றன புராணங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :