வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (10:24 IST)

விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை.!

samy statue
உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி சீர்காழியில் உள்ள விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 28வது தலமான இக்கோவிலில்  திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். 
 
இவ்வாண்டு 52ம் ஆண்டு கோவிலின் தென்புறம் அமைந்துள்ள லோகநாயகி தாயார் சன்னதியில் கோவிலில் ஆதினம் ஸ்ரீ பத்ரி நாராயணன் மற்றும் பிரபு பட்டாசியார்கள் முன்னிலையில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
 
thiruvillaku pooja
இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், குடும்ப ஷேமம் வேண்டியும் திருவிளக்கு பூஜை செய்தனர். அப்போது 1008 தாயார் சகஸ்ரநாம பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீப லட்சுமி பூஜையும் நடைபெற்றது. 

 
பூஜைகளை கோவிலின் தலைமை அர்ச்சகர் பத்ரி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். திருவிளக்கு பூஜையில் சீர்காழி தாலுக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து  திரளான பெண்கள் கலந்து கலந்துகொண்டு பெருமாளையும் தாயாரையும் வழிபட்டனர்.