1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (10:06 IST)

வீட்டு கூரையில் காகம் கரைவதின் சகுன சாஸ்திர பலன்கள்!

Crow
சகுன சாஸ்திரங்களில் முக்கியமான இடத்தில் உள்ள பறவை காகம். சனி பகவானின் வாகனமான காகம் நின்று கரையும் திசைகளிலும், கொண்டு வரும் பொருட்களிலும் பல்வேறு சகுனங்களை கொண்டுள்ளது.



பொதுவாக காலை வேளையில் ஒரு வீட்டின் மரத்தில் அமர்ந்து காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என்பது பலரும் அறிந்த விஷயம்.

அதை தாண்டி காகம் கொண்டுள்ள பல சகுன பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். ஆற்றங்கரை ஓரம் உள்ள பால் மரங்களில் அமர்ந்து காகம் கரைந்தால் மழை பொழியும் என்பதற்கான சகுனம் ஆகும்.

மலர் வகைகள் மற்றும் கனி வகைகளை காகம் கொத்திக் கொண்டு வந்து வீட்டின் கூரை மேல் போட்டால் அந்த வீட்டில் கர்ப்பமாகும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கும். புல் வகைகள் மற்றும் குச்சிகளை காகம் கொண்டு வந்து கூரை மேல் போட்டால் அந்த வீட்டில் பெண் வாரிசு உண்டாகும்.

Sani Baghavan


வீட்டு தோட்டத்தில் உள்ள பசுமையான மரங்களில் காகம் கூடு கட்டுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அவ்வாறு கூடு கட்டுவது அந்த வீட்டாருக்கு செல்வத்தையும், செழிப்பையும் அளிக்கும். அதேசமயம் காகம் பட்டுப்போன, தீயினால் எரிந்து போன மரத்தில் கூடு கட்டினால் அது எதிர்கால துன்பத்தை முன்னறிவிப்பதாக கருதப்படுகிறது.

காகங்கள் கூட்டமாக கரைந்து கொண்டே ஒரு ஊரையோ, கிராமத்தையோ சுற்றி வந்தால் அப்பகுதிக்கு நடக்கவிருக்கும் துன்பங்களை முன்னறிவிப்பதாக உள்ளது. ஒருவர் பயணம் செய்யும்போது காகம் வலம் இருந்து இடம் போவது லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் குறிக்கிறது. ஒரு வீட்டிலிருந்து காகம் பாத்திர, பண்டங்களை தூக்கி செல்வது அபசகுணமாக கருதப்படுகிறது.

Edit by Prasanth.K