1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (14:00 IST)

விபத்துக்குள்ளான காரில் யூடியூபர் இர்பான் இருந்தாரா? விசாரணையில் திடுக் தகவல்..!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட யூடியூபர் இர்பான் கார் மோதிப் பெண் ஒருவர் பலியான சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது விசாரணையில் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் கார் மோதி பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது டிரைவர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் 
 
இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர் அசாருதீன் மீது மட்டும் 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran