1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (18:35 IST)

யூடியூபர் இர்ஃபானின் பென்ஸ் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு - போலீஸார் விசாரணை!

சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்பான் திருமணம் சிறப்பாக நடந்த நிலையில் தற்போது அவருடைய கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் என்ற பகுதியில் நேற்று இரவு பிரபல யூடியூபர் இர்பான் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிர் இழந்துள்ளார். 
 
யூடியூபர் இர்பானின் காரை அவருடைய ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஒட்டியதாக தெரிகிறது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
மேலும் காரை டிரைவர் அசாரூதின் தான் ஓட்டினாரா என்பது குறித்து உறுதி செய்ய சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் யூடியூபர் இர்பானின் கார் மோதிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran