யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது!
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது!
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அரக்கோணம் அருகே நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு யூடியுப் பார்த்து கணவரும் அவருடைய உறவினர்களும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது
இதில் குழந்தை பரிதாபமாக பலியானது என்பதும் லோகநாதனின் மனைவி அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்ட நிலையில் லோகநாதன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன