கொரோனாவுக்கு இஷ்டத்திற்கு மருந்து பரிந்துரை! – கம்பி எண்ணும் யூட்யூப் பிரபலம்!
கொரோனா பாதிப்புக்கு அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பரிந்துரைத்த யூட்யூப் சேனல் பிரபலத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
யூட்யூபில் பிரபலமான உணவு குறித்த ”சாப்பாட்டு ராமன்” என்ற சேனலை நடத்தி வருபவர் பொற்செழியன். உணவுகள் பர்றி வெளியிடும் இவரது வீடியோக்களை லட்சக்கணக்கில் மக்கள் பார்க்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு அரசு அங்கீகரிக்காத சில ஆங்கில மருந்துகளை பொற்செழியன் பரிந்துரைத்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதை தொடர்ந்து பொற்செழியனை போலீஸார் நோய்கள் தடுப்பு விதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.