Daily Horoscope
✕

திருமணமான பெண்ணுடன் காதல் – சித்தியின் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

Updated: சனி, 21 செப்டம்பர் 2019 (11:11 IST)
சென்னையில் திருமணமான பெண்ணுடன் பழகக்கூடாது என சொன்னதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் எனும் இளைஞர். இவருக்குத் தாய் தந்தை இல்லாததால் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணிடம் காதலாக பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார். இதுதொடர்பாக சித்திக்கும் மனோஜுக்கும் இடையே தினசரி சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு நோட்டீஸ்! சபாநாயகர் அதிரடி..

தமிழ் நூல்கள் மட்டு மல்ல, ஆங்கில நூல்களிலும் போலி எழுத்தாளர்கள்: பிரபல பொருளாதார நிபுணர் பெயரில் மோசடி..

நன்கொடை 75 சதவீதம் சரிவு!.. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி...

தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தேசிய குத்துச்சண்டை வீராங்கனை சடலமாக கண்டெடுப்பு: நெடுஞ்சாலையில் பிணம் இருந்ததால் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments