சென்னை விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் காலை ஒரு நபர் நின்றுள்ளார். தீடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். 50 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்தார். இதைக்கண்டு அங்கிருந்து பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதனால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் அந்த தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விமான நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துக்கொண்ட நபர் குறித்த தகவல்களும் எதுவும் வெளியாகவில்லை. மேலும், தற்கொலை செய்துக்கொண்ட நபர் கைப்பை ஒன்று வைத்திருந்ததாகவும், அதில் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்தததாகவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.