பரோட்டா சாப்பிட்டு படுத்த இளைஞர் உயிரிழப்பு...அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரி மாநிலத்தில் பரோட்டா சாப்பிட்டு படுத்த இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்துள்ள சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இங்கு விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர்.
சில கடைகளில் சுகாதாரமின்றி சமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில்,. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி(33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
கொரொனா ஊரடங்குக் காலத்தில் இருந்தே வீட்டில் இருந்தே அவர் பணியாற்றிக் கொண்டிருந்ததால் நேற்று மாலை தன் மனைவியுடன் சுல்தான்பேட்டையிலுள்ள ஒரு கடைக்குச் சென்று பரோட்டாவும், பிரைட் ரைஸும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து தூங்கினார், விடியற்காலையில், அவர் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.