1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (15:50 IST)

செத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடியில் இன்று துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் அருகில் போலீசார் நின்று கொண்டு பேசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் நடத்திய போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் பலியானதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், தூத்துக்குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே இன்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு மூலம் சுட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காளியப்பன் என்ற ஒரு வாலிபர் மரணமைடந்துள்ளார். அவரின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
இந்நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே கிடக்கும் காளியப்பனை சுற்றி போலீசார் நிற்கின்றனர். அப்போது, அவரின் உடல் லேசாக அசைகிறது. எனவே,  அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் ‘செத்துப் போன மாதிரி நடிக்கிறான். விடு..’ என அலட்சியமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.