ஏற்கனவே இரண்டு திருமணம் - 17 வயது சிறுமியை சீரழித்த காமுகன்
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆன நிலையில், ஒரு இசைக்குழுவில் மேடைப்பாடகியாக உள்ள சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நித்திரவிளை எனும் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, அந்த பகுதியிலிலுள்ள ஒரு இசைக்குழுவில் மேடைப்பாடகியாக உள்ளார். மேலும், அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளின் பாடி வந்துள்ளார்.
அவர் கடந்த 5ம் தேதி ஒரு இசை நிகழ்ச்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரின் வீட்டார் பல இடங்களிலும் அவரை தேடியுள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், அந்த சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.
அதில், நாகர்கோவில் பகுதியில் ஒரு வாலிபருடன் அந்த சிறுமி தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. எனவே, அங்கு சென்ற போலீசார் அந்த சிறுமியையும், அந்த வாலிபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அப்போது, களியக்காவிளை பகுதியில் வசிக்கும் அந்த வாலிபரின் பெயர் ஸ்டாலின் (29) என்பதும், அவர் இசைக்குழுவில் நடனம் ஆடுபவர் என்பது தெரியவந்தது. மேலும், இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த சிறுமி ஸ்டாலினின் காதல் வலையில் வீழ்ந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆசைவார்த்தை குறி அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில், ஸ்டாலின் ஏற்கனவே 2 முறை திருமணமானவர் என்பதை அந்த சிறுமியிடம் அவர் மறைத்துள்ளார். முதல் மனைவிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரை விட்டு விலகி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவருக்கும் 3 மாத கை குழந்தை உள்ளது. இந்நிலையில்தான், 3வது அந்த 17 வயது சிறுமியை தனது வலையில் வீழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இதை அறிந்து அந்த சிறுமியும் அதிர்ச்சியடைந்தார்.
எனவே, ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.