கிரேனின் மேல் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் கிரேன் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது உடல்நிலை சரியில்லாததால் சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அண்ணாமலைக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காதால் வேதனையுற்ற அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ராயப்பேட்டையிலுள்ள ஈ.ஏ.வணிக வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 75 மீட்டர் உயரமுள்ள கிரேன் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீண்ட நேரம் போராடி அண்ணாமலையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் அந்த பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது