Daily Horoscope
✕

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

Written By Prasanth K
Updated: திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (15:52 IST)

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் கல்லூரி சேரும்போது ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெறும் முறையே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதாவது நேரடியாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள், தொலைதூர கல்வி மற்றும் திறந்த நிலை முறையில் மேலும் ஒரு பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க அனுமதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலமாக ஒரு பட்டமும், தொலைதூர கல்வி மூலம் ஒரு பட்டமும் பெற முடியும். அந்தந்த பட்டங்களில் அது குறித்த விவரங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

 

இதனால் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நேரடி பாடத்தேர்வுகளுடன் தொடர்புடைய பிற பாடங்களையும் படித்து பட்டம் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

ஈரான் மீது போர்.. வேணும்.. வேணாம்!.. இஸ்ரேல் பிரதமருக்கும் டிரம்புக்கும் இடையே மோதல்...

மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் 35 கிலோ நகை கொள்ளை!.. கடை திறந்து 15 நாட்களில் அதிர்ச்சி...

ரூ. 20 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம்.. இன்று ரூ.2.5 கோடி வருமானம்.. 3 இந்தியர்கள் சாதனை...

மனிதர்களின் கனவுகளை வீடியோவாக மாற்றும் AI.. இது வேற லெவல்...

ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்.. பிராட்பேண்ட் சேவையில் புதிய சாதனை...

அடுத்த கட்டுரையில்
Show comments