1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (13:26 IST)

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு.....

பிரபல தமிழ் எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரன்(71) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் மரணமடைந்தார்.

 
சிறுகதை, நாவல் எழுத்தாளர், சினிமா இயக்குனர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டவர் பாலகுமாரன். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் 150க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை 23 திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. அதுபோக, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பாட்சா படத்தில் ரஜினிகாந்த் பேசிய ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன  மாதிரி’ என்கிற வசனம் இவர் எழுதியதுதான்.
 
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனவே, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு பல எழுத்தாளர்களும், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.