1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (11:11 IST)

நல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இடதுசாரி தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த வரைவு திட்டம் குறித்த மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழக்கு 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வரைவு திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் வருகிற 19ம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில், காவிரி தொடர்பாக நல்லகண்ணு தலைமையில் விவாதம் என்ற கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூ. கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நல்லகண்ணு அய்யாவிடம் ஒப்புதல் பெறாமல் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளனர் என அக்கட்சி கூறியுள்ளது. எனவே, இந்த கமல்ஹாசன் அறிவித்துள்ள இந்த கூட்டத்தில் நல்லகண்ணு கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.