ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (20:59 IST)

வழிப்பாட்டு தலம் இடிப்பு... பிரபல நடிகர் மீது போலீஸில் புகார் !!

களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் மீது வழிபாட்டுத் தலத்தை இடித்ததாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விமலுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அடுத்துள்ள பண்ணாங்கொம்பு ஆகும்.

இவரது வீட்டிற்கு முன் 100 மீ தூரத்தில் ஊர் மந்தை என்ற இடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விளக்குத்தூண் அமைத்து வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் அதே இடத்தில் 2 அடி சுவர் எழுப்பி மேடை எழுப்பி வழிகட்டு வந்துள்ளனர்.

நேற்று 7 பேர் கொண்ட கும்பர் அந்த வழிபாட்டுத் தளத்தை இடித்துள்ளதாகத் தெரிகிறது, அவர்காளுடன் நடிகர் விமலும் இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் புத்தாநத்தம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு நடிகர் விமலையும் போலீஸார் அழைத்து விசாரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.