திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஜெ.துரை
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (12:50 IST)

இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற சிறப்பு பிரார்த்தனை!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற சிறப்பு பிரார்த்தனை.


மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து  மதுரை எஸ்எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவில் வைத்து இன்று சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதி போட்டியிலும், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் எஸ் எஸ் சரவணன் பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Edited By: Sugapriya Prakash