1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (08:21 IST)

மேக்கப் முக்கியமில்ல: உயிர்தான் முக்கியம்; பெண்களுக்கு அமைச்சர் நறுக்!!

சாலை விதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாடம் ஏராளமான விபத்துக்களை நாம் பார்க்கிறோம், கேள்விபடுகிறோம். இந்த விபத்துக்கெல்லாம் முக்கிய காரணம் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதே..
 
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் தயவுசெய்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் விபத்துக்களை தடுக்க முடியும். அனைவரும் தலைகவசம் அணிந்துதான் வண்டி ஓட்ட வேண்டும். 
 
குறிப்பாக பெண்கள் தங்கள் மேக்கப் கலைகிறது என்பதால் ஹெல்மெட் அணிவதில்லை. மேக்கப்பை விட உயிர் தான் முக்கியம். ஆகவே பெண்கள் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.