ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (20:45 IST)

மகளிர் உரிமை திட்டம்: மகளிருக்கு வழங்கப்பட்ட பிரத்யேக டெபிட் கார்டுகள்!

udhayanidhi
“கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்” கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 1051 மகளிருக்கு, இத்திட்டத்துக்கான பிரத்யேக டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு  நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் 1051 மகளிருக்கு, இத்திட்டத்துக்கான பிரத்யேக டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தன் சமூக வலைதள பக்கத்தில், 

''தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்” கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 1051 மகளிருக்கு, இத்திட்டத்துக்கான பிரத்யேக டெபிட் கார்டுகளை வழங்கினோம்.
 
மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம், மகளிருக்கு கல்வி உரிமை - சொத்துரிமை தந்த தி.மு.கழகம், இன்றைக்கு மகளிரின் பொருளாதார உரிமையையும் நிலைநாட்டியுள்ளது என்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் மத்தியில் உரையாற்றினோம்.
 
மேலும், 600 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினோம்'' என்று தெரிவித்துள்ளார்.