1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (13:55 IST)

மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு தண்டனையா?

ராமேஸ்வரம் அருகே விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துக்கொண்டதால், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 

 
ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி என்பவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். அவரை கிராமத்திற்குள் நுழையவிடாமலும், யாரிடமும் பேசவிடாமலும் ஊர்த்தலைவர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து கிராமத் தலைவர் முருகேசனிடம் கேட்டபோது, அந்தப் பெண் மறுமணம் செய்த பின்னர் அவரிடமிருந்து கோயில் வரி வசூலிக்கப்படவில்லை என்றும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.