மெரினாவில் ஆன்ட்டியுடன் உல்லாசம்; விடிந்ததும் நடந்தது என்ன?
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நீச்சல் குளம் அருகே 35 வயதுடைய பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினாவில் காலையில் வாக்கிங் சென்றவர்கள் மணலில் பாதி முடப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்றை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அண்ணாசதுக்கம் போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்ட போது மூக்கிலும், காயங்களிலும் ரத்தம் வழிந்துக்கொண்டே இருந்து உள்ளது. மேலும், உடலெங்கும் காயங்களும், முகத்தில் பலமாக தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீஸார் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். அந்த பெண் இறந்து கிடந்த இடத்தில் அவரது மொபைல் போன், 4 ஜோடி செருப்பு, மது பாட்டில்கள் இருந்துள்ளது.
இதன மூலம் அந்த பெண் உல்லாசத்திற்குகாக அழைத்து வரப்பட்டிருப்பார் அப்போது ஏதேனும் பிரச்சனை நடந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் யூகித்துள்ளானர். அந்த மொபைல் போனை வைத்து ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.