1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (17:04 IST)

10 நிமிடத்தில் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்.. ஹிஜாப் அணிந்தது தான் காரணமா?

ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில் 10 நிமிடத்தில் அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவம் கர்நாடகா  அல்லது வடமாநிலங்களில் நடக்கவில்லை என்பதும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தான் நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணுக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது.  அரபு ஆசிரியரான ஷபானா தேர்வு அறைக்குள் ஹிஜாப்புடன் அனுமதிக்கப்பட்டு பத்து நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுதினார். 
 
ஆனால் தேர்வு அலுவலர் ஹிஜாப்பை நீக்குமாறு கூறிய நிலையில் ஷபானா மறுத்துள்ளார். இதனை அடுத்து அவர் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva