25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் படம் நடிக்கும் ஜோதிகா!
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.
இப்போது மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜோதிகா 1998 ஆம் ஆண்டு டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலமாகதான் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவர் எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. இப்போது 25 ஆண்டுகள் கழித்து இந்தி படத்தில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து அவர் இந்தி படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.