பெண்ணின் சிறுநீரகத்தில் 1 கிலோ எடையில் கல்: சர்ஜரி மூலம் அகற்றி சாதனை
ஈரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் ஒரு கிலோ எடையுள்ள கல் இருந்ததை கண்டுபிடித்து அதை சர்ஜரி மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள வீரப்பன்சத்திரம் என்ற பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் மிகப்பெரிய கல் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக மருத்துவர் குழு ஒன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்ற முடிவு செய்தனர். ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு சுமார் 3 மணி நேரம் சர்ஜரி செய்து அந்த கல்லை அகற்றினர். அந்த கல்லின் எடை சரியாக ஒரு கிலோ இருந்தது. தற்போது அந்த பெண் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.