1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (16:18 IST)

நான் ஜெ.வின் மகள் ; சோபன்பாபுவே என் தந்தை - பெங்களூர் பெண் நீதிமன்றத்தில் மனு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
ஜெ.வின் மகள் நான் என பலர் அவ்வப்போது கிளம்புவது வாடிக்கையான ஒன்று. இதற்கு முன் இதுபோல் சில பெண்கள் கூறினார்கள். ஆனால், அவை அனைத்தும் பொய் என உறுதியானது.
 
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா(30)  தான் ஜெ.வின் உண்மையான மகள் என உரிமை கோரியுள்ளார். தன்னை ஜெ.வின் வாரிசாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உண்டான காதல் மூலம் 1980ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி தான் பிறந்ததாகவும், ஜெ.வின் சகோதரி சைலஜா-சாரதி தம்பதியினருக்கு தான் தத்து கொடுக்கப்பட்டதாகவும், ஜெ.வின் அத்தை மகள் ஜெயலட்சுமியே பிரசவம் பார்த்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2015ல் தனது சைலஜா இறந்துவிட்டதாகவும், அதன் பின்னரே, உறவினர் மூலம் தனக்கு உண்மை தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், ஜெ.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த உண்மையை இதுவரை கூறவில்லை எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜெ.வின் உடலை தோண்டியெடுத்து, டி.என்.ஏ சோதனை செய்து பார்க்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அதோடு, ஜெ.வின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள அவர், ஜெ.விற்கு வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் எனவும் அம்ருதா கூறியுள்ளார்.

இதற்கு முன் இதுபோல் சில பெண்கள் உரிமை கோரியிருக்கிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம், பிரதமர், ஜனாதிபதி என யாரும் சென்றதில்லை. அம்ருதாவின் இந்த மனு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இவரின் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இவரின் கோரிக்கை ஏற்கப்படுமா இல்லை நிராகரிக்கப்படுமா என்பது அதன்பின் தெரியவரும்.