மயானத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட 4 வயது சிறுவன்: சித்தப்பனின் வெறிச்செயல்
4 வயது சிறுவன் கல்லால் அடித்துக்கொள்ளப்பட்ட வழக்கில் இதற்கு உடந்தையாக இருந்த சிறுவனின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 4 வயது சிறுவன் கல்லால் அடித்துக்கொள்ளப்பட்ட வழக்கு நேற்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கொடூர கொலையில் உடந்தையாக சிறுவனைன் தாய், சித்தப்பா மற்றும் சித்தி இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
சிறுவனின் தாய் கீதா, முதல் கணவரை பிரிந்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு வாழந்து வந்துள்ளார். முதல் கணவனின் மூலம் பிறந்த சிறுவன் ஹரீஷ் 2வது கணவருடன் வாழவதற்கு தடையாக இருப்பதாக கீதா அவளது தங்கை புவனேஷ்வரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், புவனேஷ்வரியின் கணவன் சிறுவனை மயானத்திற்கு ஆழைத்து சென்று கல்லால் அடித்து கொன்றுள்ளான். சிறுவன் கொல்லப்படும் போது புவனேஸ்வரி மயானத்தில் யாராவது வருகிறார்களா என்று பார்த்து சொல்ல காவலுக்கு நின்றுள்ளாள்.
இந்த இறக்கமற்ற கொலை சம்பவத்தை கேட்டு அதிர்ந்து போன போலீஸார் கீதா, கீதாவின் 2வது கணவன், புவனேஷ்வரி, புவனேஷ்வரியின் கணவன் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளதுள்ளனர்.