வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (15:55 IST)

ஒரு பெண்ணுக்கு இரு காதலர்கள் – மருத்துவமனையில் வெடித்த மோதல் !

மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் இரண்டு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகியதால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்து அரிவாள் வெட்டு வரை சென்றுள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார். இதனால் அந்த பெண் அவர் வசிக்கும் பகுதியில் இருந்த ஐய்யப்பன் என்ற நபரிடம் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அதிருப்தியடைந்த ஐய்யப்பன், அந்தப் பெண்ணுக்கும் மருத்துவமனையில் அவரோடு நெருக்கமாகப் பழகும் ரவி என்பவருக்கும் தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார். இதையறிந்து ஆத்திரமான ஐய்யப்பன் இன்று மருத்துவமனைக்கு வந்து பணியில் இருந்த ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகம் பதற்றமாக காவலர்கள் ஐய்யப்பனைக் கைது செய்தனர். படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.