புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (08:27 IST)

ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசயத் தூண்டனும் – பலபேரை முட்டாளாக்கிய பெண் !

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போலியான தங்க நாணயங்களைக் கொடுத்து பெண் ஒருவர் பலரை ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமான இதில் ஒரு பெண் பல பேரை நூதனமாக ஏமாற்றியுள்ளார். மருத்துவமனை நுழைவாயிலில் நிற்கும் அவர் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் ‘எனது தந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்த தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என பரிதாபமாக கேட்பது வழக்கம். பலபேரும் ஆஹா தங்கநாணயம் 500 ரூபாய்க்கா என்று பணத்தைக் கொடுத்துள்ளனர்.

பின்னர்தான் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது தெரியவந்துள்ளது. இதுபோல பல மோசடிகள் அங்கு நடந்ததை அடுத்து காவலர்கள் பிரியா என்ற அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு கூட பிரியா வயதான முதியவர் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகைகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.