1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:33 IST)

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா.? 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில்.! தவெக சார்பில் விளக்கம்.!!

Vijay
தமிழக வெற்றிக்கழக மாநாடு  குறித்து காவல்துறை எழுப்பிய 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி, கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். மேலும் தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது.  
 
இந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த திட்டமிட்டு, காவல்துறையினர் இந்த இடத்தை நேரில் சென்றும் பார்வையிட்டனர். இந்த நிலையில் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறையினர் தவெக கட்சியினருக்கு கடிதம் வழங்கியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

 
காவல்துறை எழுப்பி உள்ள கேள்விகள் குறித்து தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி, காவல்துறையின் 21 கேள்விகளுக்கு நாளைக்கு பதில் அளிக்கப்படும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.