ஐ நா அழைப்பை ஏற்றுப் பங்கேற்பாரா ஸ்டாலின் ? – இடைத்தேர்தல் நெருக்கடி !
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று துவங்கவுள்ள நிலையில் அதில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேச ஐநா மனித உரிமைகள் ஆணையம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு அவர் அழைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.