புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:59 IST)

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி? முக ஸ்டாலின் அதிரடி திட்டம்

தன்னைப் போலவே தனது மகன் உதயநிதியும் சென்னை மேயர், திமுக இளைஞரணி செயலாளர் , அமைச்சர், துணை முதல்வர் மற்றும் முதல்வர் பதவி என படிப்படியாக வளர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனை அடுத்து முதல் கட்டமாக திமுக இளைஞரணி பதவியை உதயநிதிக்கு கொடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவரை சென்னை மேயராக்க மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைக்க முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்கு திமுகவின் மூத்த தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், உதயநிதி சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் இளைஞர் அணி உறுப்பினர்கள் தீயாய் வேலை செய்து அவரை மேயராக்குவது உறுதி என்றும் கூறப்படுகிறது 
 
சென்னை மேயர் பதவியை உதயநிதி பெற்று விட்டால் அடுத்த கட்டமாக அவரை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவி தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தை அதிரடியாக தடுக்கும் முயற்சியில் அதிமுக வட்டாரங்கள் முயற்சி செய்து வருகின்றதா.ம் அதாவது சென்னை மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உதயநிதி மேயர் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
ஒரு வேளை சென்னையை தனித் தொகுதியாக அறிவித்து விட்டாலும் மதுரை, கோவை ஆகிய இரண்டு மேயர் தொகுதிகளில் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன