1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:50 IST)

நாங்குநேரியும் நமதே!! காங்கிரஸை எதிர்க்கிறதா திமுக? தலைமையின் முடிவு என்ன??

திமுக நிர்வாகிகள் நாங்குநேரி இடைத்தேர்தலில் தொகுதியை காங்கிரசுகு கொடுக்காமல் திமுக வேட்பாளரையே களமிறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனராம். 
 
தமிழக சட்டமன்றத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் யார் போட்டியிடுவது என்று காங்கிரஸ் - திமுக கூட்டணி இடையே இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் விருப்பம் தெரிவிக்கலாம், ஆனால் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எடுப்பார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
அதோடு, நாங்குநேரியை காங்கிரஸுக்கு கொடுக்காமல் திமுக வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என திமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். அப்படி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் அதிகரிக்கும் என கணக்கு போட்டுள்ளனராம். 
 
இதற்கு முன்னரே திருச்சியில் பிரச்சார கூட்டமொன்றில் பேசிய உதயநிதி, திமுக தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என்று பேசினார். இது காங்கிரஸாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள வைகோ, காங்கிரஸை கூட்டணி கட்சியென்றும் பாராமல் ராஜ்யசபாவிலே விமர்சித்து பேசியதால் மதிமுக - காங்கிரஸ் இடையே சச்சரவு உண்டானது. அப்போதும் திமுக அதில் பெரிதாக தலையிட்டுக் கொள்ளவில்லை.
 
இதை வைத்து பார்க்கும் போது ஸ்டாலின் திமுக வேட்பாளரையே நிறுத்த முடிவெடுத்துள்ளாரோ என தோன்றினாலும், இதனால் காங்கிரஸ் - திமுக இடையே பிரச்சனை உண்குமா என்ற ஐயமும் எழுகிறது.