திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:46 IST)

அதிமுக, அமமுக இணைப்பு – டிடிவி தினகரன் பதில் !

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமமுக பலவீனமடைந்துள்ளதாக வரும் செய்திகளை அடுத்து அதிமுகவுடன் இணைவதாக எழுந்துள்ளதாக செய்தியினை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு கடுமையானப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து அந்த கட்சியில் இருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் வேறுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். செந்தில் பாலாஜி மற்றும் தங்கத்தமிழ்செல்வன் போன்றவர்கள் திமுகவில் இணைந்ததால் அக்கட்சிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அக்கட்சியை அதிமுகவோடு இணைக்க முடிவு செய்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுபற்றி இன்று கும்பகோணத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘அவை வெறும் ஊகம், உங்கள் ஊகத்துக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.